Feb 13, 2009

நபி வழி தொழுகை

தொழுவதால் ஏற்ப்படும் நன்மைகள்: (முஹம்மதே) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை தீமையைவிட்ட தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான் அல்குர் ஆன்:29:45

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது: அதில் அவர் தினமும் ஐந்து வேளை குளிக்கின்றார்: அவரது மேனியிலுள்ள அழுக்குளில் எதுவும் வஞ்சியிருக்குமா?எனக் கூறுங்கள்'' என்று நபித்தோழரிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது'' என நபித்தோழர்கள் கூறினார்கள். ''இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் சிறிய பாவங்களை அகற்றுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுபஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 528 முஸ்லீம்1185

''ஐவேளைத் தொழுகை, ஒரு ஜுமு ஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையில் ஏற்ப்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்: பெரும் பாவங்களைத் தவிர'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல் முஸ்லீம்394 இன்ஷா அல்லாஹ் தொடரும்.................

0 வாழ்த்துக்கள்: