நபி வழியில் தொழுகை சட்டங்கள்
தொழுகையின் முக்கியத்துவம்
முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டியங்களில் மிக முக்கியமானதும் தொழுகையாகும். இதுவே முஸ்லீம்களின் அடையாளம் ஆகும் .
தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! அல்குர்ஆன் 2:238.
எவ்வித பேரமோ,நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன் தொழுகையை நிலை நாட்டுமாறும், நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும்,வெளிப்படையாகவும் (நல்) வழியில் செலவிடமாறும் நம்பிக்கை கொண்ட எனது அடியார்களுக்கு (முஹம்மதே) கூறுவீராக! அல்குர்ஆன் 14:31.
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. அல்குர் ஆன் 4:103
''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல். தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரீ 8, முஸ்லீம் 21
''இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்:முஸ்லீம் 134
''நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கு) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்: அதை விட்டவர் காபிராகிவிட்டார்'' என்று நபி{ஸல்} அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்கள்: நஸயீ 459, திர்மிதீ 2545 இட்னுமாஜா 1069, அஹ்மத் 21859
இது போன்ற ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகின்றன.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.................
0 வாழ்த்துக்கள்:
Post a Comment