தொழாததாழ் ஏற்ப்படும் தீங்குகள்
கடமையான தொழுகையை ஒருவர் விடுவது அவரை நரகத்தில் கொண்டு சேர்க்க போதுமான காரணமாகும்.
அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள்.குற்றவாளிகளிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?" என்று விசாரிப்பார்கள். ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும இருக்கவில்லை" எனக் கூறுவார்கள்.
அல்குர் ஆன்:74:41- 43
ஒரு மனிதரின் தலை நசுக்கப்படுவதை நபி (ஸல்) அவர்கள் கனவில் கண்டார்கள். அது பற்றி அவர்கள் விளக்கும் போது அவர் குர்ஆனைக் கற்று அதைப் புறக்கணிதது கடமையான தொழுகையை தொழாமல் உறங்கியவர் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்:ஸமுரா (ரலி)
நூல் :புகாரீ
இஸ்லாத்தின் மிக முக்கியமானகடமையான தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்பதைப் பெரும்பாலான முஸ்லீம்கள் அறியாமல் உள்ளனர்.
0 வாழ்த்துக்கள்:
Post a Comment