கடமையான தொழுகையை நிறைவேற்றும் முன்பு இகாமத் சொல்லி தொழுகையை துவங்க வேண்டும்.
கைகளை நெஞ்சில் கட்டிய பின்னர் இந்த ஆரம்ப துஆவை ஓதவும். ''அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரீப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயாய கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ் அல்லாஹும்ம மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்.
தொழுகையில் முதல் துஆ ஓதிய பின்னர் சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டும். ''சூரத்துல் ஃபாத்திஹ ஓதாதவருக்குத் தொழுகையில்லை''என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உபாதா (ரலி) நூல்கள்: புகாரீ 756, முஸ்லிம் 651.
சூரத்துல் ஃபாத்திஹாவின் வசனங்கள்: பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் மாலி(க்) யவ்மித்தீன். இய்யா(க்)க நஅபுது வஇய்யா(க்)க நஸ்(த்)தயீன். இஹ்தினஸ்ஸிரா(த்)தல் முஸ்த(க்)கீம். ஸிரா(த்)தல்லதீன அன்அம்(த்) த அலைஹிம் கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன் ஆமின் என்று ஓத வேண்டும் .
சூரத்துல் ஃபாத்திஹா ஓதிய பின்னர்குர்ஆனில் நமக்குத் தெரிந்த முழு அத்தியாயத்தையோ, அல்லது சில வசனங்களையோ ஓதவேண்டும்.
ருகூவில் ஓத வேண்டியவை: சுப்ஹான ரப்பியல் அழீம் (மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்) என்று மூன்று தடவை கூற வேண்டும். நூல்:நஸயீ 1121.
ருகாவிலிருந்து எழும் போது: ''ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா''என்று கூறவும்.
பின்பு நிலைக்கு வந்து ''ரப்பனா லக்கல் ஹம்து'' என சொல்லவும். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 789. இன்ஷா அல்லாஹ் தொடரும்........
0 வாழ்த்துக்கள்:
Post a Comment