தொழுகையின் அவசியம்
ருகூவு செய்தல்: குர் ஆன் வசனங்களை ஓதி முடித்த பின் ருகூவு செய்ய வேண்டும். ருகூவு என்றால் குனிவது.
''அல்லாஹு அக்பர்'' எனக் கூறி இரு கைகளையும் காது சோனைகள் வரையோ, தோள் புஜங்கள் உயர்தி குனிந்து இரு முட்டுக் கால்களையும் பிடித்து கொள்ள வேண்டும்.
குனிந்திருக்கும் போது இரு கைகளையும் விலாப்புறங்களில் படாதவாறு வைக்க வேண்டும்.
''நபி (ஸல்) இவர்கள் தொழுகைக்காக நிற்கும்போது தனது இரு தோள் புஜங்கள்வரை இருகைகளையும் உயர்த்தினார்கள். ருகூவுக்கு தக்பீர் கூறும்போது இதேபோல் செய்தார்கள்.'' அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி
ருகூவின் போது :''சுப்ஹான ரப்பியல் அழீம்'' என்று மூன்று முன்று முறையோ அதற்கு மேலோ கூறவேண்டும். ''
நபி(ஸல்) அவர்கள் தமது ருகூவில் ''சுப்ஹான ரப்பியல் அழீம்'' எனக் கூறினார்கள்''. அறிவிப்பவர்:ஹுதைபா (ரழி)நூல் : அஹ்மத், நஸயீ
ருகூவின்போது குர்ஆன் வசனங்கள் ஓத அனுமதியில்லை.
''ருகூவின் போதும் ஸஜ்தாவின் போதும் குர்ஆன் ஓதுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.'' அறிவிப்பவர்:அலீ (ரலி) நூல் முஸ்லிம்.
ருகூவிலிருந்து எழுதல் : ருகூவிலிருந்து ''சமி அல்லாஹு லிமன் ஹமிதா'' என கூறி இரு கைகளையும் காது சோனை வரையோ, தோள் புஜங்கள் வரையோ உயர்த்தி நிமிர்ந்து நிலைக்கு வர வேண்டும்.
நிலைக்கு வந்தும் இரு கைகளையும் தொங்கவிட்டவராக ''ரப்பனா லகல் ஹம்து'' என கூற வேண்டும்.
''இமாம் ''சமிஅல்லாஹு லிமன் ஹமிதா'' கூறும்போது நீங்கள் ''அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து'' என்று கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் அறிவிப்பவர்:அபூ ஹுரைரா (ரலி) நூல்:புகாரி
இன்ஷ அல்லாஹ் தொடரும்...........
0 வாழ்த்துக்கள்:
Post a Comment