தொழும் முறை (தொழுகையின் ஆரம்பம்)
எந்த நேரத்தில்? எந்த தொழுகை? எத்தனை ரக்அத்கள்? யாருக்காகத் தொழுகை? எதை முன்னோக்கித் தொழுகை? போன்றவற்றை மனதில் எண்ணிக்கொள்ள வேண்டும். வாயால் மொழியத் தேவயில்லை நவைத்து அன் உஸல்லி...... என்று சிலர் நாவால் மொழிகின்றனர். நிய்யத் என்றாலே எண்ணுதல்_ நாடுதல் என்று தான் பொருள்.
எண்ணம் என்பது உள்ளத்தின் பாற்பட்டதாகும்.(ஹஜ்ஜைத் தவிர) நிய்யத்தை இப்படி நவால் மொழிவதற்கு குர் ஆன் -ஹதீஸ் எதிலுமே ஆதாரங்கள் கிடையாது.
நிய்யத் எனும் எண்ணமின்றி தொழுதால் அது தொழுகையாகாது. கடமையான ஐவேளை தொழுகைகளின் நேரங்கள் வந்தவுடன் பாங்கு சொல்வதும், தொழுவதற்கு முன் இகாமத் சொல்வதும் அவசியமாகும். ''தொழுகை நேரம் வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்ல வேண்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) நூல்:புகாரி, முஸ்லிம்.
பாங்கு என்பது தொழுகைக்கான அழைப்பு. கடமையான தொழுகைகளை தனியாக தொழுபவரும் கூட இகாமத்தும் கூறியே ஆக வேண்டும்.
இகாமத் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர், அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், ஹய்ய அலஸ்ஸலா(த்), ஹய்ய அலல் (f) பலாஹ், கத்காம(த்)திஸ் ஸலா(த்) கத்காம(த்)திஸ் ஸலா(த்), அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் , லாயிலாஹ இல்லல்லாஹ். அல்லாஹு அக்பர் என தக்பீர் கட்டவும்.
ஸனா ஓதுதல். தக்பீர் கூறி கைகளை கட்டிக் கொண்டதும்''ஸனா'' ஒத வேண்டும்.
''அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிகி வல் மக்ரிப் அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயாய கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ் அல்லாஹும்மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல் பரத் என்று ஓதுவேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்........
0 வாழ்த்துக்கள்:
Post a Comment