தொழும் முறை (3)(தொழுகைக்கு தயாராதல்)
நிய்யத் எனும் எண்ணம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் முதலில் நிய்யத் எனும் எண்ணம் வேண்டும். ஏனெனில், ''செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்ததேயாகும்''என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்: புகாரி''
நிச்சயமாக இறைவன் உங்கள் உடல்களையோ தோற்றங்களையோ பார்பதில்லை. உங்கள் உள்ளங்களைத் தான் பார்க்கிறான்''என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்.
தக்பீர் தஹ்ரீம்
''நீ தொழுகைக்காக தயாராகி விட்டால் முழுமையாக உளூச் செய்து கா அபாவை முன்னோக்கி'' அல்லாஹு அக்பர்'' எனக் கூறு'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்.
''நபி(ஸல) அவர்கள் தக்பீர் கூறும் போது தம் இரு கைகளையும் இரு காதுகள் வரை உயர்த்தினார்கள். அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரலி) நூல்:முஸ்லிம்.
இகாமத்
கடமையான தொழுகையை கூட்டாகத் தொழுதாலும் தனியாகத் தொழுதாலும் தொழுவதற்கு முன் இகாமத் சொல்ல வேண்டும்.
இகாமத் என்பது தொழுகை தயாராகி விட்டது என்பதை காட்டுவதாகும். பாங்கில் இரண்டுடிரண்டு தடவைகள் கூறுவதை இகாமத்தில் ஒவ்வொரு தடவை கூற வேண்டும்.
''பாங்கின் வாசகத்தை இரண்டிரண்டாகவும், இகாமத்தின் வாசகத்தை ஒவ்வொன்றாகவும் சொல்லும்படி பிலால் (ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.'' அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள்: தீர்மிதி, அஹ்மத்.
இன்ஷாஅல்லாஹ் தொடரும்.............
0 வாழ்த்துக்கள்:
Post a Comment