தொழுகையின் அவசியம்
''இஸ்லாமிய மார்க்கம் ஐந்து காரியங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. அவை: வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனைத் தவிர வேறொன்றுமில்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் அடியாரும் தூதருமாவார்கள் என உறுதியாக நம்புவதும், (தினந்தோறும் ஐவேளைகள்) தொழுகையை நிலைநாட்டுவதும், (ரமளான் மாதம் முழுவதும்) நோன்பு நோற்பதம்,(வசதியுள்ளவர்கள்) ஜகாத் (எனும் ஏழை வரியை) கொடுப்பதும், (மக்கா சென்று வர) சக்தி பெற்றவர்கள் ஹஜ் செய்வதுமாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூரியள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூற்கள்: புகாரி,முஸ்லிம்.
''தொழுவதால் பற்பல நன்மைகளும் உண்டு'' ''நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டும் தடுக்கிறது'' (அல்குர் ஆன்-29:45) என இறைவன் கூறியுள்ளான்.
''தொழாவிட்டால் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் ...... தங்கள் தொழுகையில் பாரமுகமாயிருக்கும் தொழுகையாளிக்கு கேடுதான் அல் குர்ஆன் 107.4.5. முஃமினுக்கும் காfபிருக்கும் உள்ள வித்தியாசமே தொழுகை தான் என நபிஸல் அவர்கள் கூறி உள்ளர்கள் ......... மறுமையில் முதல் கேள்வி தொழுகையைப்பற்றிதான் .
இன்றைக்கு அநேக முஸ்லிம்கள் தொழுகை விஷயத்தில் மிகவும் அலட்சியமாக உள்ளனர், சரிவர தொழுவதில்லை அப்படியே தொழுதலும் கூட தான் தொழும் முறை சரியானது தானா? அல்லது தவறானதா? என்பதை விளங்காமல் ஏனோ. தானோ . வென தொழுது வருகின்றனர். தொழும் தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் அத்தொழுகை இறைவனின் தூதர் முஹம்மது ஸல் அவர்கள் காட்டித் தந்த முறைப்படி அமைய வேண்டும் மாறாக நம் இஷ்டப்படி தொழக் கூடாது. தொழுகை மிகவும் வலியுறுத்தப்பட்ட கடமையாக இருப்பதால் தான் ஒவ்வொரும் முஸ்லிமும் தன் குழந்தைகளை அவர்கள் மீது தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்பே தொழுவதற்கு பழக்க வேண்டும் என்றும். அப்படியும் அவர்கள் தொழவில்லையெனில் அதற்காக அடிக்க வேண்டும் என்றும் நபி ஸல் அவர்கள் ஏவியுள்ளார்கள்.
உங்கள் குழந்தைகள் ஏழு வயதை அடைந்து விட்டால் அவர்களை தொழுமாறு ஏவுங்கள்.. பத்து வயதை அடைந்தும் கூட தொழா விட்டால் அடித்தாவது தொழச் சொல்லுங்கள்.. என நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர். அம்ர் இப்னு ஷீஐப் ரலி நூல் அஹ்மத்.
தொடரும் ... இன்ஷா அல்லாஹ்
0 வாழ்த்துக்கள்:
Post a Comment