ஸஜ்தா: ''உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக்கால்களை வைப்பதற்க்கு முன் தனது கைகளை வைக்பட்டும் ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி) நூல் :நஸயீ 1079.
தரையில் பட வேண்டிய உறுப்புகள்: ''நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைககள் ஆகிய ஏழு உறுப்பக்கள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்படடுள்ளேன்- நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் -ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு ) தடுக்கக் கூடாது்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ ஸஜ்தாவில் ஓத வேண்டியவை: சுப்ஹான ரப்பியல் அஃலா (உயர்வான என் இறைவன் பரிசுத்தமானவன்) என்று மூன்று தடவை கூற வேண்டும். நூல்:நஸயீ 1121.
இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில்: முதல் ஸஜ்தா செய்தப்பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி எழுந்து அமர வேண்டும். அதில் பின்வரும் துஆவை ஓத வேண்டும் . ''ரப்பில் (f)பிர்லீ ரப்பில்(f) பிர்லீ'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) இரண்டாம் ரக்ஆத் : முடித்த பின்னர் மீண்டும் இரண்டாம் ரக்அத்திற்காக எழ வேண்டும். எழும் போது இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் அமர்ந்ததைப் போல் அமர்ந்து இரு கைகளையும் தரையில் ஊன்றி நிலைக்கு வர வேண்டும். பின்னர் கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஒற்றையான ரக் ஆத்களை நிறைவேற்றி விட்டு எழும் போது உட்காராமல் நிலைக்கு வர மாட்டார்கள். அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) நூல்: புகாரி 823.
''நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக் அத்துக் எழுந்தும் "அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்று ஓதத் துவங்கி விடுவார்கள்.மவுனமாக இருக்கமாட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லீம் 1050.
இரண்டாம் ரக்அத்தில் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓத வேண்டும். அத்துடன் துணை சூராவையும் ஓத வேண்டும் பின்னர் முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்றே ருகூவு, ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். அதில் ஓத வேண்டிய துஆக்களையும் ஓத வேண்டும்.
முதல் இருப்பு: இரண்டாவது ரக்அத்தில் இரண்டாம் ஸஜ்தாவை முடித்து, இருப்பில் அமரும் போது அமரும் போது அதற்க்குத் தனியான முறை இருக்கிறது. கடைசி இருப்பாக இருந்தால் ஒரு விதமாகவும் இருப்பிற்குப் பிறகு தொழுகை தொடர்ந்தால் வேறு விதமாகவும் அமர வேண்டும்.
முதல் இருப்பில் ஓத வேண்டியவை: முதல் இருப்பில் 'அத்தஹிய்யாத்' என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும்.
அத்தஹிய்யாத் துஆ: அத்தஹியா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்தஹு வரசூலுஹு.
அத்தஹிய்யாத் ஓதிய பின் இரண்டாம் ரக்அத் முடித்து மூன்றாம் ரக்அத்திற்கு எழுந்து அல்லாஹு அக்பர் என கூறி சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதினால் போதும். நிலையில் ஓத வேண்டியதை ஓதிய பின்னர் ஏற்கனவே கூறிய படி ருகூவு, ஸஜ்தாக்களை நிறைவேற்ற வேண்டும். இன்ஷா அல்லாஹ் தொடரும்..........
0 வாழ்த்துக்கள்:
Post a Comment