Apr 30, 2009

நபிவழித் தொழுகை

வீட்டுப் பிராணிகள் வாய் வைத்த தண்ணீர்

                           மனிதர்களை ஆண்டி வாழும் கோழி,சிட்டுக்குருவி,காகம்,பூனை போன்ற பிராணிகள் வாய் வைத்த தண்ணீரில் உளூச் செய்யக்கூடாது  என்று சிலர் நம்புகின்றனர் இதுவும் தவறாகும்.

அபூகதாதா(ரலி) அவர்கள் உளூச்செய்வதற்க்காக நான் தண்ணீர் வைத்தேன். உடனே ஒரு பூனை வந்து அதைக்குடிக்க ஆரம்பித்தது. பூனை குடிப்பதற்க்கு ஏற்றவாறு பாத்திரத்தை அவர் சாய்த்தார் "என் சகோதரர் மகளே! இதில் ஆச்சிரியப்படுகிறாயா?" என்று கேட்டார். நான் ஆம் என்றேன் "இவை அசுத்தம் இல்லை. இவை உங்களை சுற்றி வரக்கூடியவையாகும். " என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்.
                         
  அறிவிப்பவர்:கப்ஷா
                  நூல்கள்:திர்மிதி 85, நஸயீ 67,    அபூதாவூத் 68

பூனை வாய் வைத்தால் தண்ணீர் அசுத்தமாகாது என்பதும். அத்தண்ணீரீல் உளூச் செய்யலாம் என்பதும் இதிலிருந்து தெரிகின்றது. மேலும் ''இவை உங்களைச் சுற்றி  வரக் கூடிய பிராணிகள்" என்ற வாக்கியம். காட்டில் வசிக்காமல் வீட்டைச் சுற்றி வரும் பிராணிகள் அனைத்துக்கும் பொருத்தம் என்பதை விளக்குகின்றது. இன்ஷா அல்லாஹ் தொடரும்.......................................

0 வாழ்த்துக்கள்: