Mar 24, 2009

தொழுகை

தண்ணீர்
உளூச் செய்வதற்க்கு தண்ணீர் அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!ஆயினும் ஊளூச் செய்யும் தண்ணீர் குறித்து தவறான நம்பிக்கைகள் சில முஸ்லிம்களிடம் நிலவுகின்றன.

ஆறு, குளம், கிணறு ஆகியவற்றிலும் உளூச்செய்யலாம். இவற்றுக்கு ஆதாரம் காட்டத் தேவயில்லை.
கடல் நீர்
கடல் நீரால் ஊளூச் செய்யக்கூடாது என்ற கருத்து சிலரிடம் காணப்படுகின்றது.
''கடல் நீரில் அதிக அளவில் உப்பு கலந்திருப்பதால் ஆது தண்ணீரீன் கணக்கில் சேராது்" என்று அவர்கள் நினைக்கின்றனர். இது தவறாகும்.
ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் நீரால் உளூச் செய்ய அனுமதியளித்துள்ளனர்.
எனவே கடல் நீரால் தாராளமாக உளூச் செய்யலாம். கடமையான குளிப்பு உட்பட அனைத்துக் குளிப்புகளையும் நிறைவேற்றலாம்.

பயன்படுத்திய தண்ணீர்
"சிறிய பாத்திரங்களில் உளூச் செய்யும் போது தண்ணீர் அப்பாத்திரத்தில் தெறித்து விட்டால் அத்தண்ணீர் அசுத்தமாகி விடும்" என்ற நம்பிக்கை சிலரிடம் காணப்படுகின்றது. சில மத்ஹபுகளிலும் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. மேலும் சிறிய பாத்திரத்தில் கைகளை நுழைத்துத் தண்ணீரை எடுத்தால் அத்தண்ணீர் உளூச் செய்வதற்கான தகுதியை இழந்து விடும் எனவும் நம்புகின்றனர்.

உஸ்மான் (ரலி) அவர்கள் மணிக்கட்டு வரை கழுவிய பின் பாத்திரத்தில் கை விட்டு தண்ணீர் எடுத்துள்ளனர். அதன் மூலம் மற்ற உறுப்புகளைக் கழுவியுள்ளனர். இறுதியில் இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்து காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்......................................................................................

0 வாழ்த்துக்கள்: