May 30, 2009

நபிவழித் தொழுகை

வீட்டில் உளூச் செய்தல்
   
    வீட்டில் செய்ய வசதி வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டில் உளூச் செய்து விட்டுப் புறப்படுவதே சிறந்ததாகும். ஒருவர் உளூச் செய்த நிலையில் பள்ளிவாசலுக்குச் சென்றால் அவர் நடந்து செல்வது கூட வணக்கமாகக் கருதப்படும்.

''ஒருவர் தமது வீட்டிலும்,கடை வீதியிலும் தொழுவதை விட ஜமா அத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து  மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூச் செய்து ,அதை அழகுறச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால்அவர் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஏட்டுக்கும் அவருக்கு ஒரு படித்தரத்தை அல்லாஹ் உயர்த்துகின்றான். ஒரு பாவத்தை அவரை விட்டும் நீக்குகின்றான். தொழுகையை எதிர்பார்த்து அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும் போது அவர் தொழுபவராகவே கருதப்படுவார். தொழுதஇடத்திலேயே அவர் இருக்கும்வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவர்களுக்குத் தொல்லை  அளிக்காத வரையில் 'இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா! இவருக்கு அருள்  புரி! என்று வானவர்கள் கூறுகின்றனர்" என நபி{ஸல்} அவர்கள் கூறினார்கள்.

          அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)
              நூல்கள்: புகாரீ 477,முஸ்லிம் 1174.

   இன்ஷா அல்லாஹ் தொடரும்......................................................  

0 வாழ்த்துக்கள்: