May 26, 2008

ஏழாம் வகுப்பில் நான்!

படித்ததில் சிறு மாற்றத்துடன்!

எப்ரல் மாதம்...
விடுமுறை காலம்.
திரும்ப வரும் போது தோழி
நீயும் நானும் வேறு section-ல்
இருப்போம்.

அவசரதிற்கு குசுகுசுக்கவோ..
ஹோம் வொர்க் செய்யவோ..
உன்னை கேட்க முடியாது..

பேனாவில் ink தீர்ந்தாலோ..
Geomentry box மறந்து வந்தாலோ..
உன்னிடம் கடன் கேட்க முடியாது.

Maths டீச்சர் புரியாத algebra
சொல்லித்தரும் போதோ..
தமி்ழ் miss இலக்கனம் சொ(கொ)ல்லி தரும் போதோ..
உன் பென்ச் வரை எட்டிப் பார்த்து,
என்ன செய்கிறாய் என்று பொழுது
போக்க முடியாது.

இன்டெர்வல் டயத்திலோ
லன்ச் ப்ரேக்கிலோ
நீ இன்று என்ன கொண்டு வந்திருப்பாய் என்பதை
கண்டுபிடிக்கும் போட்டி
நடத்திக் கொண்டிருக்க முடியாது..

இனி
உன் சனி ஞாயிறு பற்றிய கதைகள்
எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாகது...

வழி நெடுக்க,வழக்கம் போல்
நீயகவே எல்லாம் பேசிவிட்டு..
என் வீட்டு வாசலில் - "வீடு வந்தாச்சு.."என்று
ஞாபக படுத்தலகாது..

இப்படியாக,
தொடங்க போகிறது
என் 7-ம் வகுப்பு.

0 வாழ்த்துக்கள்: