May 30, 2009
நபிவழித் தொழுகை
May 16, 2009
Apr 30, 2009
நபிவழித் தொழுகை
Apr 20, 2009
நபி வழித் தொழுகை
இதே கருத்தில் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களுக்கும் அறிவித்து ள்ளார்கள். புகாரீ 192.
நபி(ஸல்) அவர்களின் செயல்முறை விளக்கம் மட்டும்இன்றி வாய் மொழியாகவும் அவர்கள் அனுமதி அளித்ததற்குச் சான்றுகள் உள்ளன.
" உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தால் உளூச் செய்யும் தண்ணீரீல் கையை விடுவதற்க்கு முன் கையைக் கழுவிக்கொள்ளட்டும் என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஹுரைரா {ரலி} நூல்:புகாரீ 162
மீதம் வைத்தத் தண்ணீர்
மீதம் வைத்த தண்ணீர் பெண்கள் உளூச்செய்து மீதம் வைத்த தண்ணீரீல் ஆண்களும், ஆண்கள் மீதம் வைத்த தண்ணீரில் பெண்களும் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை தவறாகும்.
"கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது நானும், நபி (ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் குளித்திருக்கின்றோம்" என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள் நூல்: புகாரீ 263
இன்ஷா அல்லாஹ் தொடரும்...............
Mar 24, 2009
தொழுகை
தண்ணீர்
உளூச் செய்வதற்க்கு தண்ணீர் அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!ஆயினும் ஊளூச் செய்யும் தண்ணீர் குறித்து தவறான நம்பிக்கைகள் சில முஸ்லிம்களிடம் நிலவுகின்றன.
கடல் நீர்
கடல் நீரால் ஊளூச் செய்யக்கூடாது என்ற கருத்து சிலரிடம் காணப்படுகின்றது.
''கடல் நீரில் அதிக அளவில் உப்பு கலந்திருப்பதால் ஆது தண்ணீரீன் கணக்கில் சேராது்" என்று அவர்கள் நினைக்கின்றனர். இது தவறாகும்.
ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் நீரால் உளூச் செய்ய அனுமதியளித்துள்ளனர்.
எனவே கடல் நீரால் தாராளமாக உளூச் செய்யலாம். கடமையான குளிப்பு உட்பட அனைத்துக் குளிப்புகளையும் நிறைவேற்றலாம்.
பயன்படுத்திய தண்ணீர்
உஸ்மான் (ரலி) அவர்கள் மணிக்கட்டு வரை கழுவிய பின் பாத்திரத்தில் கை விட்டு தண்ணீர் எடுத்துள்ளனர். அதன் மூலம் மற்ற உறுப்புகளைக் கழுவியுள்ளனர். இறுதியில் இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்து காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.