Mar 5, 2009

நபி வழித் தொழுகை

தொழுகைக்கு நபியே முன் மாதிரி

 ஒர் ஊரில் ஒரு பள்ளிவாசலில் தொழக் கூடியவர்களை கவனித்தல் ஒருவரின் தொழுகைக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசங்கள் இருப்பதைக்காணலாம். நபிகளார் காட்டித்தந்த முறையில் எவ்வாறு தொழுவது என்பது பற்றிய அறியாமையே இந்த நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

''என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!" என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
   அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ்(ரலி)
நூல்:புகாரீ 631. 

இந்த நபிமொழியின் படி நாம் எவ்வாறு தொழவேண்டும் என்பதை நபிகளார்  காட்டித் தந்த அடிப்படையில் அறிந்துகொள்வோம். 

உளூவின் சட்டங்கள்

தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் குறிபிட்ட உறுப்புக்களைக் கழுவி தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை 'உளூ' எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால்  தொழுகை நிறைவேறாது. 

          நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும் மூட்டுக்கள் வரை உங்கள்  கைகளையும், கரண்டை வரை உங்கள் காள்களையும் களுவிக் கொள்ளூங்கள்! உங்கள் தலையை ஈரக் கையால்அதடவிக் கொள்ளுங்கள்!  குளிப்பு கடமையானோராக இருந்தால் குளித்து தூய்மையாகிக் கொள்ளுங்கள்! 
                                       அல்குர்ஆன்:5:6
 
"உளூ நீங்கியவர் உளூச் செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரீ 135, முஸ்லீம் . இன்ஷா அல்லாஹ் தொடரும்.....

0 வாழ்த்துக்கள்: