Jan 18, 2009

தொழுகையின் அவசியம்

மூன்றாம் ரக்அத் முடித்த பின்னர் நான்காம் ரக்அத்திற்காக அல்லாஹு அக்பர் என்று கூறி எழ வேண்டும். மூன்றாம் ரக்அத்தில் கைகளை உயர்த்தியதைப்போல் நான்காம் ரக்அத்துக்கு எழும் போதுகைகளை உயர்த்தாமல் நெஞ்சில் கட்டிக்கொள்ள வேண்டும் மூன்றாம் ரக்அத்தில் செய்ததைப் போன்றே அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.

நான்காம் ரக்அத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்த பின்னர் இருப்பில் அமர வேண்டும். இருப்பில் அமரும் போது மண்டியிட்டுத் தரையில் இருப்பிடம் படியுமாறு அமர்ந்து, இடது காலை வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைக்க வேண்டும்.

பின்னர் முதல் இருப்பில் ஓதிய அத்தஹிய்யாத், ஸலவாத் ஆகியவற்றை ஓத வேண்டும். அத்துடன் பின் வரும் துஆக்களையும் ஓத வேண்டும்.

ஸலவாத்: அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்) ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் இலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆரி இப்லாஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.

இருப்பில் ஓத வேண்டிய துஆ: உங்களில் ஓருவர் கடைசி தஷஹ்ஹுதை ஓதி முடித்த பின்,நரக வேதனை, கப்ரு வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனைஇ தஜ்ஜால் மூலம் ஏற்படும் தீங்கு ஆகிய நான்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுபாப்பு தேடட்டும்'' என்று நபி{ஸல்} அவர்கள் கூறினார்கள்.

''அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரி வமின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வல் மமாத், வமின் ஷர்ரி ஃபித்ன(த்)தில் மஸீஹித் தஜ்ஜால். வலது புறமும். இடது புறமும் திரும்பி ''அஸ்ஸலாமு அலை(க்)கும் வரஹ்ம(த்)துல்லாஹ்'' என்று நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கூறுவார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) நூல்கள்:திர்மிதீ 272,அபூதாவூத் 845,இப்னுமாஜா 904,அஹ்மத் 3516.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் அஸ்தஃபிருல்லாஹ் என்று கூறி மூன்று முறை பாவமன்னிப்புத் தேடுவார்கள்.

0 வாழ்த்துக்கள்: