Jun 17, 2008

தொழுகைப் பாடம் 1 (உளூ)

இறைவனின் திருப்பெயரால்.........

உளூவின் அவசியம்
தொழுகைக்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்களில் முதன்மையானது உளூ எனும் துய்மையாகும்.

''மூஃமின்களே! நீங்கள் தொழச்செல்லும் போது உங்கள் முகங்களையும் முழங்கை இரு கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் தலைக்கு மஸஹ் செய்யுங்கள். இன்னும் உங்கள் கால்கலை கரண்டை வரை கழுவிக் கொள்ளுங்கள். (அல்குர் ஆன் 5:6) என இறைவன் கட்டளையிடுகிறான்.

மேலும், இறைவனின் இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்களும் கூட ''உளூ நீங்கி விட்டால் மீண்டும் உளூச் செய்யாமல் தொழும் தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை.'' ''எவருக்கு உளு இல்லையோ அவருக்கு தொழுகை இல்லை'' என்றும் கூறியுள்ளார்கள்.
ஆகவே, உளூவைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

உளூச் செய்யும் முறை
1. நிய்யத் எனும் எண்ணம்.
2.இறை நாமம் கூறி துவங்குதல்.
3.வலப்புறமிருந்து ஆரம்பித்தல்.
4.மணிக்கட்டு வரை இரு கைகளையும் கழுவுதல்.
5.பல் துலக்குதல்.
6.வாய் கொப்பளித்தல்,மூக்கைச் சுத்தம் செய்தல்.
7.முகம், முழங்கைகளைக் கழுவுதல்.
8.தலைக்கும்,காதுகளைக்கும்''மஸஹ்'' செய்தல்.
9. கால்களைக் கழுவுதல். செய்யும் முறைஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவை கழுவலாம். இது தான் உளூச்செய்யும் முறையாகும்.

உங்களில் எவரேனும் உளூச் செய்து முடித்த பின் ''அஷ்ஹது அ(ன்)ல்லாஹிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹத அன்ன முஹம்மதன் அப்தஹு வரசூலஹு'' என்று கூறுவாரேயானால் அவருக்காக சொர்கத்ததின் எட்டு வாசல்கள் திறக்கப்படும்'' என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும் ............

0 வாழ்த்துக்கள்: